சிம் கார்டு வாங்க புதிய ரூல்ஸ்... சஸ்பெண்ட் செய்யப்பட்ட 52 லட்சம் சிம்
இன்றைய காலத்தில் டிஜிட்டல் உலகில் ஏகப்பட்ட மாற்றங்கள் வரும் நிலையில், இதனால் பல நன்மைகள் ஏற்பட்டாலும் தீமையான காரியங்களும் அரங்கேறி வருகின்றது.
ஆம் டிஜிட்டல் மாற்றத்தினை பயன்படுத்தி பல மோசடி வேலைகள் அரங்கேறி வருவதுடன், அவ்வப்போது இதனை நம்பி மக்களும் பணத்தை பறிகொடுத்து வருகின்றனர்.
இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும், இந்த மோசடி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் நாம் பேசுவதற்கு பயன்படுத்தப்படும் மொபைலில் போடும் சிம் வாங்க வேண்டும் என்றால் சில நிபந்தனைகளை டெலிகாம் துறை வெளியிட்டுள்ளது.
மொபைல் இணைப்பு ரத்து
தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை 66,000 போலி வாட்ஸப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 67,000 மோசடி சிம் டீலர்கள் ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 52 லட்சம் மொபைல் இணைப்புகளை ரத்து செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே போலி டீலரின் பேரில் நூற்றுக்கணக்கான சிம்கள் வாங்கிய வழக்குகள் உண்டு.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மோசடிகளுக்கு முடிவு கட்டும் வகையில் தொலைத்தொடர்பு துறை, செப்டம்பர் 30ம் தேதிக்கு முன்பு அனைத்து மொபைல் சிம் விற்பனை நிலையங்களை பதிவு செய்ய வேண்டும் என்று டெலிகாம் நிறுவனத்திற்கு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
அவ்வாறு பதிவு செய்யாத நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும் இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கும் சிம் கார்டு இணைப்புகளை மறுசரிபார்ப்பு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
பதிவு செய்வதற்கு தேவையானவை என்ன?
டீலர்கள் தங்களை ரெஜிஸ்டர் செய்துகொள்ள CIN நம்பர், LLPIN நம்பர், ஆதார் கார்டு, பேன் கார்டு மற்றும் வரி பதிவு சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இது இல்லாத நபர்கள் தற்போதைக்கு அஃபிடவிட் ஒன்றை சப்மிட் செய்துவிட்டு பின்னால் இந்த விவரங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், வாடிக்கையாளர்கள் அனைவரின் சான்றுகளும் சரிபார்க்கப்பட்டு போலி சான்றுகளை சப்மிட் செய்து சிம் வாங்கியவர்களின் இணைப்பை ரத்து செய்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் குறித்த வழிகாட்டுதல்களும் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |