பால் விற்க Harley Davidson-ஆ? வைரலாகும் வீடியோ- வாய்பிளந்த நெட்டிசன்கள்
Harley Davidson வாகனத்தில் இளைஞர் ஒருவர் பால் விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் Harley Davidson நிறுவனம் உலகளவில் பிரபலமான பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
உலகின் மிகவும் விலை உயர்ந்த பைக்காக கருதப்படும் இதனை வசதியுள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
தற்போது வரை 11 பைக் மொடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இந்நிலையில் இளைஞர் ஒருவர் Harley Davidson பைக்கில் பால் விற்பனை செய்து வருகிறார்.
அதாவது, 3 லட்ச ரூபாய் மதிப்புமிக்க Harley Davidson பைக்கில் இரண்டு பக்கமும் பெரிய பால் கேன்களை மாட்டிக்கொண்டு விற்பனை செய்து வருகிறாராம்.
இதுதொடர்பான வீடியோ வெளியாக நெட்டிசன்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
#WATCH: Man selling milk on Harley Davidson goes viral, netizens react and say, 'When passion meets profession'#HarleyDavidson #Milkman #India #TrendingVideo #TrendingNow #Trending #Viral #ViralVideo pic.twitter.com/BBWY24koHK
— HT City (@htcity) January 6, 2023