மைதானத்தில் இப்படித்தான் விளையாடுனாங்க! நாய் வீடியோவை பகிர்ந்த ஷேவாக்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இப்படித்தான் விளையாடினார் என நாய் வீடியோவை பகிர்ந்து விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் ஷேவாக்.
சவுத்தாம்டன் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது.
இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணி விளையாடிய போது, கேன் வில்லியம்சன் சுமார் 30 ஒவர்களை எதிர்கொண்டு வெறும் 49 ரன்களை மட்டுமே எடுத்தார்.
இவரின் மெதுவான ஆட்டம் குறித்து பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் நாய் வீடியோ ஒன்றை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளார்.
அதில், இன்று ஆடுகளத்தில் வில்லியம்சன் எனவும் பதிவிட்டுள்ளார்.
Williamson on the pitch today.#WTC21final pic.twitter.com/TBGLHSb0E4
— Virender Sehwag (@virendersehwag) June 22, 2021