ஸ்டாலினிடம் கண்ணீர் விட்டு அழுத சீமான்... தற்போது சரமாறியாக எழுப்பிய கேள்வி
தனது தந்தை இறந்ததற்கு ஆறுதல் கூற ஸ்டாலின் போன் செய்த நடிகர் சீமான் கதறியழுததை யாராலும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினைக் குறித்த பல கேள்விகள் எழுப்பியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற, நிகழ்ச்சியை நடத்தி, ஒவ்வொரு தொகுதி மக்களிடமும் மனுக்கள் பெற்றார்.
தி.மு.க, ஆட்சிக்கு வந்ததும், அந்த மனுக்கள், 100 நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு தீர்வு காணப்படும் என அவர் அறிவித்தார்.
இதனையடுத்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு காண, உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற துறையை உருவாக்கினார். அதன் சிறப்பு அலுவலராக, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து 50 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.
என்னவானது தமிழகத்தின் பிரச்னைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்னைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே!
— சீமான் (@SeemanOfficial) June 27, 2021
மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?
(2/2)