59 வயதிலும் ஜிம் செல்லும் சீமான் - இந்த ஒரு பயிற்சியில் இத்தனை நன்மைகளா?
seeman squat exercise and its benefits: சீமான் ஜிம்மில் செய்யும் ஒரு உடற்பயிற்சியில் உள்ள பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீமான் உடற்பயிற்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், 59 வயது ஆன நிலையிலும் சிக்ஸ் பேக் வைத்து அசத்தி வருகிறார்.

தனது உடல்நலத்தில் மிகவும் அக்கறையாக உள்ள சீமான், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
அதில் சீமான் செய்யும் ஒரு பயிற்சி குறித்தும் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் இந்த பதிவில் காணலாம்.
இதில் சீமான் எடையோடு சேர்த்து ஸ்குவாட்ஸ் பயிற்சி செய்கிறார். இது உடலின் பல்வேறு பகுதிகளை வலிமையாக்க உதவுகிறது.
இதை செய்யும் போது தசைகளுக்கு அதிக அழுத்தம் கிடைப்பதால் தசைகள் வலுவடைகிறது. குறிப்பாக கீழ் உடல் தசைகளான தொடையின் முன் பகுதி, பின் பகுதி, காலின் கீழ் பகுதியிலுள்ள கெண்டைக்கால் தசைகள் ஆகியவற்றை பலமாக்குகிறது.

எடையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி மேலே வரும்போது, உடலை நேராக வைத்திருக்க வயிற்றுப் பகுதியும், கீழ் முதுகுப் பகுதியும் கடுமையாக வேலை செய்வதால் உடலின்கோர் தசைகள் வலுவடைந்து, தண்டுவடம் பாதுகாக்கப்படுகிறது.
மேலும், அதிக எடை கொடுத்து தசைகளுக்கு பயிற்சி அளிக்கும்போது, உடல் அதிகப்படியான கலோரிகளை எரிப்பதால் உடல் எடை மற்றும் தொப்பை வேகமாக குறையும்.
மேலும், இந்த பயிற்சி எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதால் வயதான காலத்தில் வரும் எலும்புத் தேய்மான நோய்களைத் தடுக்க உதவுகிறது.
முழங்கால் மற்றும் கணுக்காலை சுற்றியுள்ள தசைநார்கள் வலுவடைவதால், மூட்டு வலிகள் வராமல் தடுக்கப்படுகிறது.
ஆனால் இந்த உடற்பயிற்சியை தவறான முறையில் செய்தால் கீழ் முதுகு, முழங்கால் பகுதிகளில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தகுந்த ஜிம் மாஸ்டரின் வழிகாட்டுதலின் படி முறைப்படி செய்ய வேண்டும்.