பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாத சீமான்... தனது விருப்பத்தை மட்டும் ஸ்டாலினுக்கு தெரிவித்தது எப்படி?
இன்று முதல்வராக பதவியேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வாழ்த்துக்களையும், தனது கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்மொழியின் மீட்சி, தமிழர்களின் நலன், தமிழினத்தின் தன்னுரிமை, வளக்கொள்ளைக்கெதிரான மண்ணுரிமை, சமூக நீதி, மாநிலத்தன்னாட்சி, ஏழ்வர் விடுதலை, மதவாதத்திற்கு எதிரான போர் போன்றவற்றில் சமரசமின்றி நின்று நிலைபெற்று தமிழகத்தின் குரலாய் ஒலிக்க வேண்டுமென சீமான் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.