கனவில் பெண்களை பார்ப்பது கெட்ட சகுணமா?
கனவில் பெண்களை பார்ப்பது சுப விளைவுகளை கொடுக்குமா அல்லது அசுப விளைவுகளை கொடுக்குமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தூங்கும் போது மனிதர்களுக்கு கனவுகள் என்பது வருவது இயல்பான ஒன்றாகும். இந்த கனவினை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வோம். இவ்வாறாக வரும் கனவுகள் சில தருணத்தில் மிகவும் மோசமானதாக இருப்பதுடன், தூக்கத்தையும் கெடுக்கின்றது.
சில தருணங்களில் கனவில் மிருகங்கள், மனிதர்கள் என வருவதுண்டு. இங்கு கனவில் பெண் வந்தால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஸ்வபன சாஸ்திரத்தின்படி கனவுகள் பல செய்திகளை அளிப்பதுடன், எதிர்காலம் குறித்த நிகழ்வுகளை எச்சரிக்கவும் செய்கின்றது என்று கூறப்படுகின்றது.
பிரம்மமுஹூர்த்தத்தில் கனவு காணப்பட்டால், அத்தகைய கனவு ஒரு வாரத்தில் நனவாகும், ஆனால் முந்தைய கனவின் பலனைப் பெற ஒரு மாதம் ஆகும் என்றும் கூறப்படுகின்றது.
கனவில் பெண்கள்
கனவில் வயதான பெண்களை அவதானித்தால், மங்களகரமானதாகப் கருதப்படுவதுடன், எதிர்காலத்தில் நீங்கள் செல்வத்தையும், கௌரவத்தையும் பெறலாமாம்.
நகை அணிந்த பெண்களை கனவில் கண்டல் நீண்ட காலமாக முடியாமல் இருக்கும் வேலைகள் விரைவில் முடியும் என்று அர்த்தமாம்.
அழகான பெண்ணையோ அல்லது தேவதையையோ கனவில் கண்டால் நல்ல அறிகுறியாக இருக்குமாம். மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படுவதுடன், பொருளாதாரமும் மேம்படுகின்றது.
மோசமாக சிரிக்கும் பெண்ணைக் கண்டால் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட இருக்கின்றது என்றும், சாதாரணமாக சிரிக்கும் பெண்ணை கண்டால் வாழ்க்கையில் செல்வம் விரைவில் வரும் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |