சர்க்கரை அளவு ஏறாமல் இருக்கனுமா? அப்போ இந்த விதைகளை ட்ரை பண்ணுங்க
பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் இருந்தால், சர்க்கரை நோய் வரும் அபாயம் இருக்கும். உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், உங்கள் உணவில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.
உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை இயற்கையான முறையில் குறைக்க பல எளிமையான வழிகள் உள்ளது. அதுவும் நம் சமையலறையில் உள்ள சில விதைகளே இதை அற்புதமாக நிறைவேற்றும். அந்த வகையில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் சில விதைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீரகம்
உங்கள் ரத்தத்தில் உள்ள யூரியா அளவை குறைத்து நீரிழிவு நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்துகிறது சீரகம். தங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு மற்றும் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுமென நினைப்பவர்கள் சீரகத்தை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சியா விதைகள்
சியா விதையில் அதிகளவு நார்சத்து இருப்பதால், இது இன்சுலின் எதிர்ப்பை குறைத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றது. அதுமட்டுமின்றி டைப்-2 டயாபடீஸ் மற்றும் வளர் சிதை மாற்ற நோய்க்குறி வரும் ஆபத்தைக் குறைக்கிறது. தினமும் சிறிதளவு சியா விதைகளை எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.
வெந்தயம்
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடான நீரில் வெந்தயம் கலந்து குடியுங்கள். இப்படிச் செய்வதால் உங்கள் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். மேலும் வெந்தயம் இயற்கையாகவே நமது ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கும் வல்லமை படைத்தது.
பூசணி விதை
பூசணி விதையில் நிறைய மக்னீசியம் உள்ளது. டயாபடீஸ் ஆபத்து வராமல் தடுக்கவும் ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் இது மிகவும் அவசியமாகும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பூசணி விதை உதவுகிறது.
சூரியகாந்தி விதை
சூரியகாந்தி விதையில் அதிகளவு க்ளோரோஜெனிக் அசிட் இருப்பதால், இயற்கையான முறையில் ரத்த சர்க்கரை அளவை குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் பூசணி விதையில் பைடோஸ்டெரோல், க்ளைகோசைட்ஸ், கஃபைன் க்யூனிக் ஆசிட் போன்றவை அதிகளவு உள்ளது. அது சர்க்கரை அளவை வெகுவாக குறைக்க துணைப்புரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |