நமக்கே தெரியாமல் உடல் ஆரோக்கியத்தில் நாம் செய்யும் தவறுகள்
நாம் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாகவும், அக்கறையாகவும் இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் நாம் பல நோய்களுக்கு ஆளாகாமல் இருக்கலாம்.
அந்த வகையில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல ஆரோக்கிய வழிகளை கூட தவறான வழிமுறையில் செய்கிறோம்.
அந்த தவறான வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல்நல குறிப்புக்கள்
1. உடலில் நீர்ச்சத்து குறையும்போது நமக்கு தானாகவே தாகம் எடுக்கும், அப்போது தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். ஆனால் சிலர் அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். இது உடலில் ஆக்ஸிஜனை அதிகரித்து பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
2.இயற்கையில் காணக்கூடிய அதிக சத்துக்கள் கொண்ட உணவுகளை உண்பது ஆரோக்கியம் தரக்கூடியது. ஒவ்வொரு சத்துக்களும் நமது உடல் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது.
ஆனால் சில சத்துகளான சாம்பல் சத்து, உப்பு சத்து, சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து போன்ற சத்துக்கள் உடலுக்கு அளவிற்கு அதிகமாக கிடைக்கும் போது அது உடலில் எலும்பு சம்மந்தமான பிரச்சனைகளை கொண்டு வரும்.
3.நாம் ஒரு நாளில் குறைந்தது 8 மணிநேரம் உறங்க வேண்டும். அப்போதுதான் நமது மூளை சறுசுறுப்பாக வேலை செய்கிறது. ஆனால் சிலர் வேலைகளில் பிஸியாக இருப்பதால் உறக்கத்தை மறந்து வேலை செய்கின்றனர்.
இதனால் உடல் நோய் ஏற்படுகின்றது. ஞாபக மறதி உறக்கமின்மை போன்ற பல நோய்களை கொண்டு வருகிறது. எனவே உறங்கும் நேரத்தை சரியான வழிமுறையில் வைத்திருக்க வேண்டும்.