அடர்த்தியான கூந்தலுக்கு ஸ்ருதி ஹாசனின் என்ன செய்றாங்கன்னு தெரியமா? அவரே பகிர்ந்த ரகசியம்!
பொதுவாகவே அனைவருக்கும் தங்கள் கூந்தல் மீது தனி பிரியம் இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பான விடயம் தான்.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்த சூழல் மாசு, வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தம், முறையற்ற உணவுப்பழக்கவழக்கம் என ஏராளமான காரணிகள் கூந்தல் உதிர்வுக்கு கூந்தல் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கின்றது.

குறிப்பாக சினிமா நடிகைகளுக்கு அழகிய கூந்தல் மிகவும் முக்கியம். இன்னும் சொல்லப்போனால் இவர்களின் மூலதனமே இவர்களின் வெளித்தோற்றம் தான்.
இந்நிலையில், உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசனின் தனது கூந்தல் எப்போதும் அடர்த்தியாகவும், கருகருவென இருப்பதற்கு என்ன காரணம் என்பதை சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.அதில் இவர் குறிப்பிட்டுள்ள கூந்தல் பராமரிப்பு முறை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கூந்தல் பராமரிப்பு ரகசியம்
காரணம் பெரும்பாலான ரசிகர்கள் ஸ்ருதி ஹாசன் கூந்தலை பராமரிக்க விலையுயர்ந்த சலூன்களுக்குச் செல்கிறார் என்றும் அல்லது வெளிநாட்டு சீரம்களைப் பயன்படுத்துகிறார் என்றும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் அவர் குறிப்பிடுகையில், தனது கூந்தல் பராமரிப்பு ரகசியம் வெறும் நல்லெண்ணெய் தான் என்கின்றார்.

சில சமயங்களில் நல்லெண்ணையுடன், தேங்காய் எண்ணெய் அல்லது பதாம் எண்ணெய் கலந்து பயன்படுத்துவாராம்.பெரும்பாலும் நல்லெண்ணெய் தான் அதிகம் பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் ஒவ்வொரு முறையும் தலைக்கு குளிப்பதற்கு முதல் நாள் இரவு எண்ணெயைத் தடவி, அதனுடன் தூங்கி, காலையில் தலைக்கு குளிப்பதாகவும், மேலும் அவர் நான் தினமும் தலைமுடியைக் வாஷ் பண்ணுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக நல்லெண்ணெய் முடி வளர்ச்சிக்கு பெரிதும் துணைப்பரியும். மேலும் தேங்காய் எண்ணெய் முடியை மென்மையாக வைத்திருக்க உதவுவதுடன், பாதாம் எண்ணெய் முடிக்குத் தேவையான வைட்டமின்களை வழங்கி அதை வலிமையாகவும் பளப்பளப்பாகவும் வைத்திருக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |