குழந்தைகள் தூங்கும் போது நயன்தாரா காதில் கூறும் விஷயம்!இது தான் தாய் வளர்ப்பா?
நடிகை நயன்தாரா தனது மகன்னளை எப்படி வளர்க்கிறார் என பகிர்ந்து கொண்டுள்ளார். இதிலும் அவர் குழந்தைகள் தூங்கும் போது ஒரு விடயத்தை கூறுகிறார்.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தின் மூலமாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு வாடகை தாய் மூலமாக இரு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன் மற்றும் உலக தெய்விக் என் சிவன் என்று பெயரிட்டுள்ளனர்.
இதில், உயிர் என்பது வாழ்க்கையையும், உலக் என்பது உலகத்தையும் குறிக்கிறது. தற்போது இவர்கள் இருவருக்கும் 2 வயதாகின்றது.
நயன்தாரா சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளின் வேலைகளை யாரிடமம் கொடுக்காதல் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவாராம்.
இந்த நிலையில் இவர் தன் இரு மகன்களையும் எப்படி வளர்ப்பார் என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னுடைய மகன்கள் இருவரும் பணிவாக, அன்புடனும், அக்கறையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
அதற்காக அவர்கள் தூங்கும் போது அவர்களது காதில் அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும், மற்றவர்களிடம் அக்கறையுடனும், கருணை உள்ளத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவேன்.
அப்போது தான் அமைதியாக இருக்கும் ஆத்மாவானது நாம் என்ன சொல்கிறோம் என்பதை உடலும் ஆத்மாவும் ஏற்றுக் கொண்டு அதன்படி செயல்படும். இதைத் தான் மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். என கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |