பிரபல இந்தி நடிகருக்கு இரண்டாவது திருமணமாம்! பொண்ணு யார் தெரியுமா?
இந்தியின் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் பிரபல நடிகையொருவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிருத்திக் ரோஷனின் சினிமா பயணம்
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் தான் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவரின் மாஸ் நடிப்பால் பலக்கோடி இந்தி ரசிகர்களை தனவசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இவர் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் இயல்பாகவே கதாபாத்திரமாக நடிக்கம் திறமைக் கொண்டவர்.
இதனை தொடர்ந்து இவர் சினிமா பேஷன் டிசைனராக பணியாற்றிய சுஷானே கான் நீண்டக்காலமாக காதலித்து வந்தள்ளார்.
காதல் திருமணம்
இதன் பின்னர் இருவீட்டாரின் சம்பத்துடன் கடந்த 2000-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள்.
இந்நிலையில் இவர்களுக்கு தற்போது 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சுமார் 14 ஆண்டுகள் மகிழ்ச்சியாக தங்களின் வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
மேலும் கடந்த 2014-ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய மணைவியுன் ஏதோவொரு வகையில் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இரண்டாவது திருமணம்
இதனை தொடர்ந்து சமிபக்காலமாக தற்போது இந்தி திரையுலகில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்தி நடிகை சபா ஆஷாத்தை, ஹிருத்திக் ரோஷன் காதலித்து வருகிறார்.
மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார்கள்.
இதனையடுத்து இருவரும் அடுத்த சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
சபா ஆசாத்தை ஹிருத்திக் ரோஷன் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு அவர்களின் குழந்தைகளும் சம்மதம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.