பாம்பு கடித்து உயிர் பிழைத்த நபர்... மருத்துவமனையிலிருந்து திரும்பிய மறுநாளே மீண்டும் கடித்த சோகம்
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறை பாம்பு கடித்து எஸ்கேப் ஆன மனிதர் இரண்டாவது தடவை கடித்ததால் உயிரிழந்துள்ளார்.
பாம்பு கடித்து நடந்த சோகம்
ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள மெஹ்ரான்கர் கிராமத்தில் ஜசாப் கான்(44) என்ற நபர் வசித்து வரும் நிலையில், கடந்த 20ம் தேதி இவரை பாம்பு கடித்துள்ளது.
இவரின் கணுக்காலில் பாம்பு கடித்த நிலையில், உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து ஜுன் 25ம் தேதி வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவரை மறுநாளே மீண்டும் மற்றொரு காலில் பாம்பு கடித்துள்ளது. பாலைவனப் பகுதியில் பொதுவாக காணப்படும் பாம்பின் துணை இனமான பாண்டி என்று அழைக்கப்படும் பாம்பு கடித்துள்ளதாக கூறப்படுகின்றது. காவல்துறையினரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாவது முறை பாம்பு கடித்ததில் ஜசாப் கான் உயிரிழந்துள்ளார். இவருக்கு தாய், மனைவி, நான்கு மகள்கள் மற்றும் 5 வயது மகன் உள்ளனர். ஜசாப் கானின் மரணம் குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.