நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணமா? கவலையில் சமந்தா ரசிகர்கள்
திரையுலகமே வியக்கும் அளவுக்கு திருமண பந்தத்தில் இணைந்த ஜோடிகளுள் நாக சைதன்யா, சமந்தா முக்கிய இடம் வகிக்கின்றனர்.
யார் கண்ணு பட்டுடதோ? என யோசிக்க வைக்கும் அளவுக்கு அவர்கள் இருவரின் விவாகரத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளளாக மாறியிருந்தது.
தற்போது நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி சமந்தா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியள்ளது.
நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா தென்னிந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க நட்சத்திர ஜோடி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இரண்டாவது திருமணம் செய்ய திட்டம்
பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. விவாகரத்து பெற்ற நாகசைதன்யா பிரபல தென்னிந்திய நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ஷோபிதாவை புதிய வீட்டிற்கு அழைத்து நாக சைதன்யா தனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அந்த செய்தி தொடர்பில் இருவரும் மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நாகார்ஜுனா தனது மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மணமகள் ஒரு பெரிய வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன.
ஆனால் இது குறித்து நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் இதுவரை உறுதி செய்யவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |