காய்ச்சல், சளி, இருமல் குணமாக வேண்டுமா? வீட்டிலேயே கஷாயம் தயாரிக்கலாம்
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல் பிரச்சனைகளை குணமாக்கும் கஷாயத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டுவிட்டாலே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல்நலத்தில் பிரச்சனை ஏற்படும்.
அதிலும் குழந்தைகளுக்கு தான் அதிக தொந்தரவு காணப்படும். சளி, காய்ச்சல், இருமல் பிரச்சனைக்கு வீட்டிலேயே அருமையான கஷாயம் ஒன்றினை தயார் செய்யலாம்.
இதற்கு நமக்கு எளிதாக வீட்டில் வளர்க்கும் மூலிகை செடிகளே போதுமானதாகும்.
தேவையான பொருட்கள்
கற்பூரவள்ளி இலை - 5
துளசி இலை - 6
அரச இலை - 3(கொழுந்தாக)
ஏலக்காய் - 1
அதிமதுரம் - அரைத்துண்டு
மிளகு - 7
செய்முறை
கற்பூரவல்லி, துளசி மற்றும் அரச இலைகளைக் கொதிக்கும் நீரில் சேர்க்கவும். பின்பு ஏலக்காய், அதிமதுரம் மற்றும் மிளகு ஆகியவற்றினை இடித்து தூளாக்கி அதனையும் நீரில் கலக்கவும்.
இந்த கலவை அரை டம்ளர் அளவிற்கு வரும்வரை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும். கஷாயம் ஆறிய பின்பு பெரியவர்கள் அப்படியே அருந்தலாம்.
அதுவே குழந்தைகளுக்கு பாதி கஷாயம் மற்றும் தேன் கலந்து கொடுக்கவும். இதனை நாள் ஒன்றிற்கு மூன்று வேலை அருந்தி வந்தால், காய்ச்சல், சளி குணமாகிவிடும். மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
