நிலநடுக்கத்தில் கொந்தளித்த கடல்! உயிர்பிழைக்க தவித்த கடல் சிங்கங்களின் பரிதாப காட்சி
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக தீவுகளில் பாறைகள் சரிவுக்கிடையே சிக்கிய கடல்சிங்கங்கள் உயிர்தப்பிக்க செய்த செயல் காணொளியாக வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தில் தவிக்கும் கடல் சிங்கங்கள்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை ஒட்டி 8.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ரஷ்யா, ஜப்பான் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், 4 மீற்றர் வரை சுனாமி அலைகள் எழுந்து மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து, ரஷ்யாவில் குரில் தீவுகளில் பாறைகள் சரிந்ததால், ஸ்டெல்லர் கடல் சிங்கங்கள் உயிர்தப்பிப்பதற்காக கூட்டம் கூட்டமாக கடலில் விழும் காட்சி வெளியாகியுள்ளது.
பேராசிரியர் குரோமோவ், கப்பலின் ஊழியர் நிகிதா சின்சினோவ், எடுத்த இந்த வீடியோவில், நிலநடுக்கத்தால் பாறைகள் சரிவதை தவிர்ப்பதற்காக கடல் சிங்கங்கள் கொந்தளிப்பான கடலுக்குள் குதிப்பது பதிவாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |