Ari Pathiri: அட்டகாசமான அரி பத்திரி சாப்பிட்டு இருக்கீங்களா?
பொதுவாக உணவு என்றால் எல்லொருக்கும் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு இடத்திற்கென்று ஸ்பெஷலாக இருக்கும்.
அப்படியான ஒரு உணவு தான் கேரள மாநிலத்தில் செய்யக்கூடிய அரி பத்திரி இந்த பெயரை கேட்டாலே உங்களுக்கு வித்தியாசமாக இருக்கும்.
இதை அடை என்றும் சொல்வார்கள். இதை செய்வது மிகவும் சுலபம் இதற்கு கொஞ்சம் அரிசி மா இருந்தால் போதும் செய்யலாம்.
அரி பத்திரி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மா - ஒரு கப்
- உப்பு - கால் டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்து வந்ததன் பின்னர் அதில் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அரிசிமாவை கொட்டி கைவிடாமல் கிண்டி கொண்டே இருக்க வேண்டும். அரிசி மா நன்றாக வெந்து கொழுக்கட்டை செய்யும் பதத்தில் வர வேண்டும்.
இந்த அளவில் மாவை இறக்கி அதை தட்டு போட்டு மூடி வைத்து விட வேண்டும். பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து ஒரு மிதமான சூட்டில் வந்ததும் இதை வேறொரு பாத்திரத்தில் மாற்றி கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.
இப்படி பிசையும் போது எண்ணெய் தடவ கூடாது. வேண்டுமானால் நீங்கள் கையில் தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்து கொள்ளலாம்.
பின்னர் சப்பாத்தி கட்டையில் வைத்து கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து திரட்டி கொள்ள வேண்டும். அதிகமான அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக திரட்ட வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு தட்டையான பாத்திரத்தை வைத்து அது சூடான பிறகு அதில் திரட்டிய மாவை போட்டு திருப்பி போட்டு நன்றாக பொன்நிறத்தில் வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
இந்த உணவை நீங்கள் சிக்கன் குருமாவுடன் சேர்த்து சாப்பிடலாம். வேறு எந்த கறி வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம்.