தேள் அதன் எக்ஸோஸ்கெலட்டனை உதிர்ப்பதை பார்த்துள்ளீர்களா? மெய்சிலிர்க்கும் காட்சி
ஸ்கார்பியன் மோல்டிங் எனப்படும் தேள் அதன் எக்ஸோஸ்கெலட்டனை உதிர்க்கும் மெய்சிலிர்க்க வைக்கும் 8 மணிநேர காட்சியின் சுருக்கப்பட்ட காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே தேள் என்றால் விஷம், பயம், ஆபத்து என்றுதான் நாம் அனைவரும்அறிந்திருக்கிறோம். மற்ற பூச்சிகளுடன் ஒப்பிடுகையில் தேளின் விஷம் மிகவும் கொடியதாக பார்க்கப்படுகின்றது.
இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளையும் கொண்டு காணப்படுகின்றது. இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டுள்ளது.
தேளின் முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது விஷத்தை பாய்ச்சிக் கொல்வதற்கும் துணைப்புரிகின்றது.
தேள்கள் அதன் எக்ஸோஸ்கெலட்டனை குறிப்பிட்ட காலத்தில் உதிர்க்கும் இவ்வாறு அதன் எக்ஸோஸ்கெலட்டனை முழுமையாக உதிர்த்து வெளியேறுவதற்கு சுமார் 8 மணிநேரம் தேவைப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |