பற்களை கத்தரிக்கோலாக மாற்றி கடை திறப்பு செய்த அமைச்சர்... விழுந்து விழுந்து சிரித்த மக்கள் கூட்டம்!
பாகிஸ்தானில் கடை திறப்பு விழாவின்போது கத்தரிக்கோல் மழுங்கியிருந்ததால், ரிப்பனை பல்லால் கடித்து கடையை திறப்பு விழா செய்த அமைச்சரின் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானில் எலக்ட்ரானிக்ஸ் கடை திறப்பு விழாவுக்காக அமைச்சர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கடையை திறப்பு விழா செய்வதற்காக கட்டப்பட்டிருந்த ரிப்பனை கத்தரிக்கோல் கொண்டு நறுக்கியுள்ளார்.
ஆனால், அந்தக் கத்தரிக்கோல் மழுங்கியதாக இருந்ததால், இரண்டு மூன்று முறை முயற்சித்தும் ரிப்பன் வெட்டவில்லை. இதனால், தன் பல்லால் ரிப்பனைக் கடித்து, கடையை திறந்து வைத்தார்.
اپنے حلقے میں دوکان کے افتتاح کا انوکھا انداز۔۔۔!!! قینچی کند اور خراب تھی۔۔!!! مالک دوکان کو شرمندگی سے بچانے کے لیے نیا عالمی ریکارڈ قائم کر دیا۔۔!!!@UsmanAKBuzdar pic.twitter.com/MRxedX0ZaB
— Fayaz ul Hassan Chohan (@Fayazchohanpti) September 2, 2021
அவரின் இந்த செயல் அங்கிருந்தவர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தியதோடு, இணையத்திலும் வீடியோ வைரலாகியுள்ளது. இந்தக் காமெடியை செய்தவர் அமைச்சர் ஃபயாஸ்-உல்-ஹசன் சோஹன்.
இவர், பாக்ஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சிறைத்துறை அமைச்சராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். அவர் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தொகுதியான ராவல்பிண்டியில் கடை திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அப்போது, கடை திறப்பு விழாவுக்கு கட்டப்பட்டிருந்த ரிப்பனை, கத்தரிக்கோல் வெட்டாததால் பல்லால் கடித்து ரிப்பனை வெட்டினார்.