புற்றுநோயை கண்டறியும் எறும்புகள்: ஆய்வில் வெளியான தகவல்
முகரும் சக்தி கொண்ட எறும்புகள் புற்றுநோய் செல்களைக் கண்டறியும் என்று ஆராய்ச்சியாளர்களின் முயற்சிக்கு மகிழ்ச்சியளிக்கும் முடிவு தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சி மையம்
பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் இத்தகைய ஆய்வினை ஈடுபட்டு சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
துர்நாற்றத்தை வைத்து உணவுகளை அடையாளம் காணும் பூச்சிகள் மூலம் புற்று நோய் செல்களை கண்டுபிடிக்க முடியும் என்று கூறியுள்ளதோடு, எறும்புகளை கொண்டு ஆராய்ச்சி செய்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது.
ஆய்வாளரின் மகிழ்ச்சி
இதுகுறித்து பேசிய ஆய்வாளர் ஒருவர், புற்றுநோய் செல்களை முன்கூட்டியே அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் எறும்புகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் நேர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளன.
அதேநேரத்தில் மற்ற விலங்குகளிடம் இருந்து பெற்ற முடிவுகள் எறும்புகளிடம் இருந்து பெறப்பட்ட முடிவுகளில் இருந்து மிகக் குறைவாக உள்ளது. எறும்புகள் புற்றுநோய் செல்களின் பயோமார்க்ஸர்களைக், பயிற்சிக்குப் பிறகு எளிதாக அடையாளம் காணுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
எறும்கள் அடையாளம் காண்பது எப்படி?
சர்க்கரைக் கரைசலை வாசனையின் அடிப்படையில் எறும்புகள் அங்கு செல்வதைக் கண்டறிந்தனர். அதனை அடிப்படையாக வைத்து புற்றுநோய் செல்களை அடையாளம் காண்பதற்கு பயிற்சி கொடுத்து, சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இருவேறு புற்றுநோய் செல்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பயிற்சியில், அவர்களுக்கு நேர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளது.
இதனால் ஆய்வாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, அவர்களின் ஆய்வு முடிவையும் வெளியிட்டுள்ளனர். நாய்களைப் போலவே எறும்புகளுக்கும் மிகுந்த மோப்ப சக்தி இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருவாடு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?