அனைத்து வகையான கொரோனாவை எதிர்க்கும் புதிய மருந்து கண்டுப்பிடிப்பு! எப்போது வரும்?
கொரோனா வைரஸை தொடர்ந்து பல விதமான நோய்கள் பரவி வருகிறது. தற்போது பரவும், டெல்டா பிளஸ் வகை கொரோனா உள்ளிட்ட அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் 'சூப்பர் வாக்சின்' தடுப்பு மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவப் பல்கலையை சேர்ந்த விஞ்ஞானிகள் 'சூப்பர் வாக்சின்' என்னும் ஹைபிரிட் தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
மேலும், கொரோனா வைரசின் ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக ஆன்ட்டிபாடிகளை இந்த தடுப்பு மருந்து உருவாக்குவது எலிகள் மீதான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்புள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் இந்த மருந்து தடுப்பாற்றலை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இம்மருந்து அடுத்தாண்டு மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது.