குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி முழுசா தெரிஞ்சிக்கோங்க!
குளிர்காலம் வந்து விட்டாலே நாம் பல உடல் உபாதைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
இதற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிடும் உணவு.
நாம் நம் உணவில் கவனம் செலுத்தவில்லை என்றால் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும்.

குளிர் காலத்தில் எம்மை பாதுகாத்து வைத்திருக்கும் உணவுகளில் முதலிடம் பிடித்திருப்பது மீன்.
மீன் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குளிர்காலத்தில் மீன் உதவி புரியும். மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நுரையீரலை தொற்றுநோயிலிருந்து இது பாதுகாக்கிறது.
மீன்களில் காணப்படும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமம் வறண்டு போவதைத் தடுக்க உதவுகிறது.

குளிர்கால மாதங்களில் மூட்டுவலி மற்றும் வலி ஆகியவை குறைக்க மீன் உணவுகள் உதவி புரியும்.
மீனில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நல்ல கொழுப்பாகிய மூளை மற்றும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மீன் சாப்பிடுவது தாய்மார்களுக்கும் நல்லது என்று கருதப்படுகிறது.

மீன்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் கொழுப்பு அமிலங்களை அதிக அளவில் வழங்குகிறது.
மீனில் பூஜ்ஜிய நிறைவுற்ற கொழுப்பு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது இதயத்திற்கு நன்மையளிக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை மீன் சாப்பிடுவது இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.