இன்ஸ்டாகிராமில் பழகிய காதலனுக்காக கழிவறையில் குழந்தை பெற்ற 17 வயது மாணவி
மதுரையில் பாடசாலை மாணவியொருவர் கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியொருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு ஆன்லைன் வகுப்புக்காக ஆன்ட்ராய்ட் செல்போனை பெற்றோர் வாங்கி கொடுத்தனர்.

இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர்
இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர், ஆசை வார்த்தைக் காட்டி சிறுமியை தனியாக அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கர்ப்பமான சிறுமி, பெற்றோருக்கு தெரியாமல் இந்த விடயத்தை மறைத்து வந்துள்ளார்.

கழிப்பறையில் பிறந்த குழந்தை
இதற்கிடையே கடந்த 22ம் திகதி வீட்டின் கழிப்பறையில் குழந்தை சத்தம் கேட்டதை தொடர்ந்து, பாட்டியும் அம்மாவும் சென்று பார்த்த போது சிறுமி மயக்கத்தில் குழந்தையுடன் இருந்துள்ளார்.
பின்னர் சிறுமியையும் குழந்தையும் மதுரை அரசு மருத்துவுமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து பெற்றோர் போலீஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
போவீஸார் சிறுமியிடம் விசாரனை நடத்தியதில், இன்ஸ்டாகிராமில் பழகிய குறிப்பிட்ட வாலிபர்தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய தகவலின்படி குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் புகாரின் பேரில் சமயநல்லூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து வாலிபரை கைது செய்துள்ளனர்.
