ஆசிரியரை அடித்து துவைத்த மாணவர்கள்: அப்படியென்ன தவறு செய்தார் தெரியுமா?
இந்திய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தில் 9ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கணிப்பொறி ஆசிரியர் ஒருவர் 9ம் வகுப்பு மாணவர் ஒருவரை கண்த்துள்ளார்.
குறித்த மாணவர் வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தியதால் ஆசிரியர் கண்டித்துள்ளார்.
இதனால் ஆசிரியர் மீது கோபமடைந்த மாணவர் தனது நண்பர்களை சேர்த்துக்கொண்டு, வளாகத்தில் தனியாக இருந்த ஆசிரியரை கருப்பு துணியை முகத்தில் போர்த்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்பு பள்ளி வளாகத்தில் பதிவான சிசிடிவி காட்சியினை வைத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். குறித்த 9ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி சேர்க்கப்பட்ட நிலையில், மற்ற மாணவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.