தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் நொடியில் உயிர் தப்பிய மான்.. நடுநடுங்க வைக்கும் காட்சி
தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த மானை முதலை தாக்க வருவது போன்ற காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும், எதிர்பார்ப்புடனும் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளின் வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
மாறாக தண்ணீரில் வாழும் முதலை போன்ற கொடூர விலங்குகள் இரை கிடைத்தவுடன் அதனை வேட்டையாடி சாப்பிட்டு விடும். வேட்டையாடும் வீடியோவை பார்வையாளர்களாக பார்க்கும் பொழுது திக் திக் என்று உறைய வைக்கின்றது.
உயிர் தப்பிய மான்
அந்த வகையில், மான் ஒன்று ஆற்றங்கரையில் தண்ணீர் குடித்து கொண்டிருக்கின்றது.
சேற்றுக்குள் சேறாக முதலை இருப்பதை மான் கவனிக்கவில்லை. சில நொடிகளில் ஆக்ரோஷமாக மானை வேட்டையாட முதலை எழுந்துள்ளது.
யாரும் நினைத்து பார்க்காத வகையில் மயிரிழையில் மான் தாவி உயிர் தப்பியது. இந்த காட்சியை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் வீடியோக்காட்சியை பார்க்கும் போது உண்மையாக நடப்பது போல் தெரிகிறது.
மேலும் “ இப்படியொரு நிலை உண்மையில் வந்தால் மான் சிக்கிக் கொள்ளும்.” என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |