இரவில் கெட்ட கனவு தூக்கத்தை கெடுக்கின்றதா? தலையணை அடியில் இதை வைத்தால் போதும்
தூங்கும் போது மனிதர்களுக்கு கனவுகள் என்பது வருவது இயல்பான ஒன்றாகும். இந்த கனவினை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வோம்.
இவ்வாறாக வரும் கனவுகள் சில தருணத்தில் மிகவும் மோசமானதாக இருப்பதுடன், தூக்கத்தையும் கெடுக்கின்றது. இவ்வாறு கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தை கெடுக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தலையணை அடியில் இதை வைங்க
ஜோதிட சாஸ்திப்படி தலையணை அடியில் இஞ்சியை ஒரு துணியில் கட்டி வைத்து படுத்தால் கெட்ட கனவுகள் தடுக்கப்படுமாம்.
இதே போன்று ஏலக்காய் மற்றும் 5 அல்லது 6 கறிவேப்பிலையை ஒரு துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைக்கவும். இதுவும் கெட்ட கனவு தொந்தரவை தடுக்குமாம்.
ஒரு துண்டு மஞ்சளை துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் நல்ல தூக்கம் வருமாம்.
உறயங்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்துவிட்டு படுக்கவும். மேலும் இடது பக்கமாக சாய்ந்து படுத்தால் செரிமான பிரச்சினை ஏற்படாமலும், இதனால் தூக்கம் கெடாமலும் இருக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |