எச்சரிக்கை...! சமூக வலைத்தளங்களில் பரவும் போலி லிங்குகளை க்ளிக் செய்து ஏமாற வேண்டாம்
பண்டிக்கைக் காலங்களில் சமூக வலைத்தளங்களில் உலாவரும் போலியான லிங்குகளை க்ளிக் செய்து ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மோசடி
இப்போதெல்லாம் மோசடிகளும் மோசடிக்காரர்களும் அதிகரித்து விட்டனர். இதனால் மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். தற்போது வளர்ந்து வரும் தொழிநுட்பத்தை மையமாக வைத்துக் கொண்டு அதன் வழியில் பல மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் மோசடிக்காரர்கள்.
அந்தவகையில், தற்போது ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், சில மோசடிக்காரர்கள் வாட்ஸ் அப் மற்றும், முகப்புத்தகம் வாயிலாக போலி லிங்குகளை அனுப்பி பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதாவது பண்டிகையை முன்னிட்டு துணிக்கடை மற்றும் நகைகடைகளில் தள்ளுபடிகள் தருவதாக சொல்லி போலியான கிப்ட் மற்றும் கூப்பன் கோர்டுகளை பரப்பி வருகிறார்கள்.
அதனால் இவ்வாறான லிங்குகள் உங்கள் தொலைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக வந்தால் பயனர்கள் யாருக்கும் பகிர்ந்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |