இந்தியாவில் எஸ்பிஐ அறிமுகப்படுத்திய புதிய திட்டம்! இனி ஏடிஎம்மில் பணத்தை திருட முடியாது..
ஏடிஎம் கார்ட் தொலைந்துவிட்டால் பலரும் இழந்த கார்டை செயலிழக்க செய்யாமல் தவரும் பட்சத்தில் பல திருட்டு சம்பவங்கள் நடப்பதுண்டு.
என்னதான், சராசரியான மக்களில் சிலருக்கு விழிப்புணர்வு இருந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு இதைப்பற்றி தெரிவதில்லை.
இதனிடையே, ஏடிஎம்மில் திருடுபோவதை தடுக்க எஸ்பிஐ ஓடிபி திட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளது. கடந்த 01 ஜனவரி 2020 முதல் ஏடிஎம்மில் ஓடிபி வசதியைக் கொண்டு வந்துள்ளது.
அப்போது, இரவு 8 மணி வரை காலை 8 மணி வரை, 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது ஓடிபி வசதியைப் பயன்படுத்தித் தான் பணம் எடுக்க வேண்டும்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் பணத்திருட்டை தடுக்கலாம் 24 மணிநேரம் இந்த வசதியை எஸ்பிஐ தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
செயல்படுத்துமுறை
- முதலில் பணம் எடுக்கும் போது, கார்டை செலுத்திய பின் உங்கள் பாதுகாப்பு எண்னை பதிவிட வேண்டும்.
- அடுத்து, பணத்தை குறிப்பிட்டவுடன், உங்கள் கைப்பேசி எண்ணுக்கு ஒரு ஓடிபி (OTP)என் வரும்.
- அந்த ஓடிபி (OTP) எண்ணை சரியாக பதிவிட்டால் மட்டுமே பணத்தை நீங்கள் எடுக்க முடியும்.