சாயிஷாவுடன் க்யூட்டா டான்ஸ் ஆடுன மகள்: வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் நடிகை சாயிஷா தன் மகளுடன் நடனமாடிய க்யூட் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை சாயிஷா
தமிழில்‘வனமகன்’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை சாயிஷா. நடிகை சிம்ரனுக்கு அடுத்ததாக, சாயிஷாதான் ரசிகர்களை தன் நடனத்தின் மூலம் கட்டியிழுத்தார்.
வனமகன் படத்தையடுத்து, நடிகை சாயிஷா கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி உட்பட படங்களில் நடித்தார்.
சாயிஷா ‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து சினிமாவிலிருந்து ஒதுங்கினார் சாயிஷா. கடந்த 2021ம் ஆண்டு இத்தம்பதிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
வைரலாகும் க்யூட் வீடியோ
இந்நிலையில், தன் இன்ஸ்டா பக்கத்தில் நடிகை சாயிஷா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தன் மகள் அரியானாவுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.
2 வயது கொண்ட அரியானாவின் நடனத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆஹா... உங்களை மாதிரி நடனத்தில் அசத்த இப்போவே, மகளை தயார்ப்படுத்துகிறீர்களா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |