இலங்கை டெஸ்ட் தொடரில் இடம் பிடித்த சவுரவ் குமார் - யார் இவர்? வாய்ப்பளிக்குமா இந்திய அணி
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த தொடருக்கு பின் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க உள்ளது. இரு அணிகளுக்கான அணியை பிசிசிஐ கடந்த நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
டி20 போட்டிகள் வரும் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தர்மசாலா மைதானங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மார்ச் 4-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை முதலாவது டெஸ்ட் போட்டியும், மார்ச் 12 முதல் 16 வரை பெங்களூருவில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறும் என்று முடிவாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சவுரவ் குமார் என்கிற இளம் வீரர் இடம்பிடித்துள்ளார்.
ஏற்கனவே அணியில் ஜடேஜா, அஷ்வின் மற்றும் குல்தீப் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் வேளையில் இவரைத் தேர்வு செய்தது ஏன் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

அந்த வகையில் இவர் யார் எதற்காக தேர்வு செய்யப்பட்டார் என்பதை பற்றி இங்கே பார்ப்போம். உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தான் சவுரவ் குமார். இடது கை சுழற்பந்துவீச்சாளர் இடது கை பேட்ஸ்மேன். 2015-ம் ஆண்டில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 304 ரன்கள் அடித்து மட்டுமின்றி 17 விக்கெட்டுகளையும் அவரது அறிமுக ரஞ்சித் தொடரிலேயே கைப்பற்றி அசத்தி இருக்கிறார்.
மேலும், 2017-2018 ம் ஆண்டில் ரஞ்சி கோப்பையில் உத்தரப்பிரதேச அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை 23 விக்கெட்டுகளுடன் பெற்றார்.
இதுமட்டுமின்றி கடந்த முறை 2019-20 ஆண்டின் ரஞ்சிப் போட்டியில் 44 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். சவுரவ் குமார் 8 அரை சதங்கள் 2 சதங்கள் என 1572 ரன்கள் எடுத்து அசத்தி இருக்கிறார்.
ஒரு ஆல்ரவுண்டராக வலம் வரும் இவர் ஜடேஜாவுக்கே டஃப் கொடுக்க கூடியவர் தான். ஆனால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.
Saurabh Kumar has got a maiden India call up
— Sports Flash (@SportsFlash_1) February 19, 2022
Saurabh Kumar FC stats
Matches:46
Innings:82
Wickets:196
5w:16
10w:6#INDvSL pic.twitter.com/a7pQ0aNj3D