செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா?
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழும் நிலையில், எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட காற்று வீசுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதிலும் ஜுலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளது.
சனி பகவான் ஜுலை மாதத்தில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ள நிலையில், அதே வேளையில் செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைகின்றார்.
செவ்வாய் மற்றும் சனி இடையிலான உறவால் சில ராசியினருக்கு ஆழமான தாக்கத்தினை ஏற்படுத்தும். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏழாம் பார்வை உண்டு.
ஆனால் சனி, செவ்வாய், குரு ஆகிய கிரகங்களுக்கு சிறப்பு பார்வைகள் உள்ளது. அதிலும் சனியின் 3,7,10ம் பார்வை மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
ஜுலை மாதத்தில் செவ்வாய் ரிஷப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பதால், சனியின் 3ம் பார்வை செவ்வாயின் மீது விழுகின்றது.
இந்த பார்வையானது ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீடித்திருக்கின்றது. செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
[XO9Z3G ]
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த பார்வையானது அதிர்ஷ்டமானதாக இருக்குமாம். வேலை, வியாபாரம் என எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்குமாம்.
நீண்ட காலமாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் நிலையில், இந்த காலத்தில் போடப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் வெற்றியே கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த காலக்கட்டம் மிக அதிர்ஷ்டமானதாக இருக்கின்றது. அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
வருமாத்தில் உயர்வு ஏற்படுவதால் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைப்பதுடன், வியாபாரிகளுக்கு நல்ல் லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியினருக்கு ஆஸ்ட் மாதம் வரை மிகவும் மங்களரமானதாக இருப்பதுடன், நிதி நிலைமையும் மிகவும் சிறப்பாகவே இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைப்பதுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்தியும் வந்துசேரும். முதலீடுகளிலம் நல்ல லாபம், பண பரிவர்த்தனைகளால் நல்ல பலனும் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு ஆகஸ்ட் வரை தொழிலில் நல்ல மாற்றங்களை காணலாம். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும்.
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளதுடன், ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்குமாம். வியாபாரிகளுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |