30 வருடங்களின் பின் இணையும் சனி-சுக்கிரன் : இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி!
ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானது ஒருவருடைய பிறப்பு ராசியில் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
குறிப்பாக நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஜோதிட கணிப்புகளில் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.

அந்தவகையில், தற்போது, சனி பகவான் மீன ராசியில் 30 ஆண்டுகளின் பின்னர் பயணித்து வருகிறார்.இந்நிலையில் மீன ராசியில் அசுரர்களின் குருவான சுக்கிரன் வருவதால், இந்த சேர்க்கை ஜோதிட ரீதியில் அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றது.
குறித்த சுக்கிர பெயர்ச்சியானது மார்ச் 02 ஆம் திகதி நிகழவுள்ள நிலையில், இந்த இணைப்பின் தாக்கமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும், உச்சகட்ட அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

சுக்கிர பகவானால் ஆளப்படும் ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குறித்த சனி சுக்கிரனின் சேர்க்கை நிகழ்வதால், இவர்களின் வாழ்வில் நீண்ட காலம் எதிர்ப்பார்த்து காத்திருந்த விடயங்கள் எளிதில் நிறைவேறும்.
இவர்கள் பொருளாதார ரீதியில் இதுவரை இல்லாத ஏற்றத்தை அனுபவிக்கப்போகின்றார்கள். பல்வெறு வழிகளிலும் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் அமையும்.
தொழில் விடயத்தில் தொட்டதெல்லாம் வெற்றியை கொடுக்கும் பொற்காலமாக இந்த காலகட்டம் அமையும். ரிஷபத்திற்கு சனி பகவானும் லாப சனியாக வருவதால், நிச்சயம் பணவரவுக்கு பஞ்சமே இருக்காது.
துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளதால், இவர்களின் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக பலன்களை அனுபவிப்பார்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும் வாய்ப்பு காணப்படுகின்றது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கடன் தொல்லைகளுக்கு இந்த காலகட்டத்தில் முடிவு கட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சி உண்டாகும்.
வாழ்க்கைத் துணையுடன் நீண்ட நாட்களாக இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இருப்பினும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.மனநிலையில் அமைதி நிலவும்.
கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளதால், இந்த ராசியினரின் வாழ்க்கையில் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும்.
நிதி ரீதியில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவுக்கு லாபம் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன்களை அனுபவிப்பீர்கள். தொழில் ரீதியான எதிரிகளை அசால்ட்டாக கையாளும் ஆளுமை மேம்படும்.
புதிய வருமானத்துக்கான வழிகள் திறக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என போராடியவர்களுக்கு அதற்கான யோகம் கூடிவரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |