மீன ராசியில் நேரடி இயக்கம் பெறும் சனி : ஜூன் 2027 வரை இந்த 3 ராசிகளுக்குப் பொற்காலம்!
Saturn's Direct Motion Brings Wealth and Career Growth for These 3 Zodiac Signs : ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சனி பகவான் கர்மா மற்றும் நீதியின் அதிபதியாகக் கருதப்படுகிறார்.
ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப நன்மைகளையும் தண்டனைகளையும் வழங்குபவர் என்பதால், சனியின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிக்கிறார்.

தற்போது குருவின் ஆதிக்கம் கொண்ட மீன ராசியில் பயணித்து வரும் சனி, நேரடி இயக்கத்திற்கு மாறும்போது அதன் தாக்கம் மேலும் வலுப்பெறும்.
அந்த வகையில், டிசம்பர் 11ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலையில் இருந்து நேரடி இயக்கத்திற்கு மாறுகிறார் சனி பகவான். இந்த இயக்கம் ஜூன் 2027 வரை நீடிக்கும்.
ஜோதிடக் கணிப்புகளின்படி, சனியின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்த்தினாலும், இந்த 3 ராசிகளுக்கு தொழில், நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம்

சனிபகவான் தனது நேரடி இயக்கத்தைத் தொடங்குவது ரிஷப ராசியினரின் வாழ்க்கையில், குறிப்பாகத் தொழில் சார்ந்த விஷயங்களில், சிறப்பான முன்னேற்றங்களைக் கொடுக்கும்.
பணியில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் அல்லது சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
இந்தக் காலகட்டத்தில் அதிகளவில் செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.முன்னைய முதலீடுகளும் நல்ல லாபத்தைத் தரம்.இதனால் தங்களின் இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் அதிக வேகத்துடன் செயல்படுவார்கள்.
கன்னி

சனிபகவானின் நேரடி இயக்கம் கன்னி ராசியினரின் நிதிநிலையில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவரம். வருமானத்தையும் செலவையும் சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றல் கிடைக்கும்.
அதேபோல், அவர்களின் தொழில்முறை முயற்சிகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், அவர்களின் அறிவுத்திறனும் அதிகரிக்கும்.
எதிர்காலத்தில் அதிக வருமானத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், திடீர் பணவரவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனால் இந்தக் காலகட்டத்தில் அவர்களின் பொருளாதார நிலை வலுப்பெறலாம். காதல் வாழ்க்கையும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.
துலாம்

சனிபகவானின் நேரடி இயக்கம் துலாம் ராசியினரின் தொழில் மற்றும் வியாபார வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை கொடுக்கும்.
இதன் மூலம் பணியிடத்தில் சிறப்பான வெற்றியையும் தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியையும் அடைய வாய்ப்புள்ளது. அவர்களின் பொருளாதார நிலையில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.
புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தருணமாக இருக்கும். தற்போது வேலையில் இருப்பவர்கள் புதிய வேலைக்கு மாற விரும்பினால், அதற்கான வாய்ப்புகளும் எளிதாகக் கிடைக்கலாம். சனிபகவானின் அருளால் அவர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |