2025 ராசி பலன்: சனியின் ஆசியால் புகழின் உச்சத்தில் அமரப்போகும் ராசியினர்... யார் யார்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்பமையில் கிரக நிலைகள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என நம்பப்படுகின்றது.
கிரகங்களை பொருத்த வரையில் ராசியில் சனிபகவானின் நிலைக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. காரணம் சனி பகவான் நீதியின் கடவுளாக கருத்தப்படுகின்றார்.
ஒருவரின் கரும வினைகளுக்கு ஏற்ற பலன்களை தவறாமல் பாகுபாடு இன்றி கொடுத்துவிடுவார் என்பது ஐதீகம். சனிபகவானின் ஆசிர்வாதத்தை பெற்றால் ஆண்டியும் அரசனாகலாம்.
இதுவே அவரின் கோபத்துக்கு ஆளானால் வாழ்க்கையே பாழாகிவிடும் என்ற பதத்தின் காரணமாக சனிபகவானுக்கு இந்து மதத்தில் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ராசி பலன்கள் கணிப்பின் பிரகாரம் ராசிகளில் சனிபகவானின் நிலைக்கு அமைவாக புகழின் உச்சத்தை அடைந்து வாழ்வில் மகிழப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு முழுவதும் சனிபகவானின் ஆசீர்வாதம் பரிபூரணமாக இருப்பதால், எதிர்பாரத பணவரவுகளை பெற்று மகிழ்வார்கள்.
தொழில் ரீதியாக சடுதியாக முன்னேற்றம் நிகழும். கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வு கிடைக்கும்.
காதல் மற்றும் திருமண வாழ்வில் இருந்து வந்த கருத்து முறன்பாடுகள் நீங்கி இணக்கமான சூழல் உருவாகும். மொத்ததில் சனியின் ஆசியால் 2025 ஆம் ஆண்டு அமோகமான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சனியின் ஆசியால், நிதி மற்றும் தொழில் ரீதியில் அசுர வளர்ச்சியை அடையப்போகின்றார்கள்.
இவர்களின் நீண்ட கால திட்டங்கள் இந்த ஆண்டில் செயல் வடிவம் பெறும். பணியிடத்தில் மேலதிகாரியின் பாராட்டுக்கள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
குடும்பத்துடன் அதிகம் நேரம் செலவிடுவதற்கு முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் உறுப்பினர்களிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் ராசியில் பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டு கிரக அமைப்பின் அடிப்பமையில் சனிபகவானின் முழுமையான ஆசீர்வாதத்தை பெறுவார்கள்.
இவர்களின் தொழில் முயற்சிகள் அனைத்தும் எதிர்ப்பார்த்ததைவிடவும் அதிக பலன்களை கொடுக்கும். அடுத்த ஆண்டு முழுவதும் நிதி நிலை சீராக இருக்கும்.
எதிர்பாராத வகையில் பெரியளவான பணத்தொகை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.நீண்ட நாட்கள் ஆசைப்பட்ட விடயங்கள் ஒவ்வொன்றாக நடைபெற ஆரம்பிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |