சூரியன் - சனியால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்!
நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களையும் உருவாக்குகின்றன. கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், சிம்ம ராசியின் அதிபதியாவார்.
இவர் மாதம் ஒருமுறை ராசி மாறுகிறார். அந்த வகையில், அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குள் நுழைந்தார். துலாம் ராசியில் சூரியன் நீச்ச நிலையில் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், மீன ராசியில் சனி பகவான் இருப்பதால் சூரியன் மற்றும் சனியின் நிலைகளால் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. ஜோதிடத்தின்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 மற்றும் 8ஆம் வீடுகளில் இருக்கும்போது ஷடாஷ்டக யோகம் ஏற்படுகிறது.
இந்நிலையில், சூரியன் மற்றும் சனியால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

சனி–சூரியனால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் கன்னி ராசியினர் ஆரோக்கியப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். கூட்டுத் தொழிலில் பரிவர்த்தனைகள் மற்றும் புதிய ஒப்பந்தங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
பணிபுரிபவர்கள் அலட்சியத்தைத் தவிர்த்து, எந்த விஷயத்திலும் அவசரப்படக் கூடாது. திருமணத் தடைகள் ஏற்படலாம்.குறிப்பாக புதிய தொழில் மற்றும் முதலீடுகளில் அதிக கவனம் தேவை.
துலாம்

சனி–சூரியனால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் துலாம் ராசியினர் வேலை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் புதிய பிரச்சனைகளைச் சந்திக்கலாம். முதலீடு செய்வதற்கு முன் நன்கு ஆராய்வதுடன், நண்பர்களைக் கண்மூடித்தனமாக நம்புவதையும் தவிர்க்க வேண்டும்.
தனுசு

சனி–சூரியனால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் தனுசு ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெறக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
பண விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். ஆபத்தான முதலீடுகள் மற்றும் சூதாட்டத்தைத் தவிர்ப்பது நல்லது.பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கி சிக்கல்களை ஏற்படுத்த நேரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |