வக்கிர நிலையில் சனி பகவான்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் யார் யார்?
Saturn Retrograde: வக்கிர நிலையில் சனிபகவான் இருப்பதால் டிசம்பர் 11ம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சனியின் வக்கிர நிலை
ஜோதிடத்தில் கும்ப ராசியின் அதிபதியாக இருக்கும் சனி பகவான் ஒவ்வொரு செயலுக்கு ஏற்ற பலனைக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வரை இருக்கும் நிலையில், நீண்டகாலமாக பயணிக்கும் கிரகமாகவும் இருக்கின்றார்.
சனி பகவானின் தாக்கம் சிலரது வாழ்க்கையில் மிகவும் அதிகமாகவே இருக்கும். மேலும் சனி பகவானின் நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டாலும் அதன் தாக்கம் அனைத்து ராசியினருக்கும் இருக்குமாம்.
சனிபகவான் தற்போது வக்ர நிலையில் பின்னோக்கி மீன ராசியில் பயணித்துவரும் நிலையில், நவம்பர் மாதம் வரையிலும் இந்த நிலையில் இருக்கின்றார்.
ஆதலால் சில ராசியினருக்கு இந்த மாதம் சற்று கடினமாக இருப்பதுடன், அனைத்து விடயத்திலும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். டிசம்பர் 11ம் தேதி வரை இந்த நிலையில் இருப்பதால் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம்.

ரிஷபம்
சனியின் வக்கிரத்தினால் ரிஷப ராசியினர் பண விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம். கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணி செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளதுடன், உயர் அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக பேசுவது சிறந்தது.
வியாபாரிகளும் எந்தவொர முடிவையும் அவசரப்பட்டு எடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்திலும் சிறு சிறு விடயங்களுக்காக வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு சனியின் வக்கிரத்தினால் பணி செய்யும் இடத்தில் பல சவால்கள் இருப்பதுடன், பொறுப்புகளும், வேலையும் அதிகமாக இருக்கும். பொறுமையாக இருப்பது அவசியம்.
வேலையினை மாற்றுவதற்கு யோசித்து வருபவர்கள் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டும். தொழிலில் இருப்பவர்களுக்கு எந்தவொரு ஒப்பந்தத்தினையும் கவனமாக பார்த்து கையெழுத்திடவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுக்கவும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு சனியின் வக்கிரத்தில் பணியிடத்தில் எந்தவொரு முடிவையும் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிரிகளிடம் கவனமாகவும், பட்ஜெட் போட்டு செலவு செய்யவும் வேண்டும்.
திடீரென செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன், பண பிரச்சனைகளை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. சட்ட விடயங்கள் சிரமத்தினை கொடுத்தாலும் புத்திசாலித்தனமாக கையாள்வது சிறந்தது.

மகரம்
மகர ராசியினருக்கு சனியின் வக்கிர நிலையினால் வேலை, பொறுப்பு இவற்றினை சமநிலையில் பராமரிப்பது அவசியம். வேலையில் கடின உழைப்பு தேவையாம். கடின உழைப்பிற்கான பலனை பெறுவதற்கு சில காலம் காத்திருக்க வேண்டுமாம்.
எந்த வேலையாக இருந்தாலும் அதனை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தினருடன் நேரத்தினை செலவிட முயற்சிப்பது நல்லது.

கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த வக்கிர சனியால் பண விடயத்தில் சற்று கவனமும், தேவையற்ற செலவுகளையும் தவிர்க்கவும் வேண்டும்.
மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் கவனக்குறைவாக இருப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. முதலீடுகள் தொடர்பான எந்தமுடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |