சனி விபரீத ராஜயோகம்: பெரிய அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் தன்னுடைய ராசியில் பெயர்ச்சியடையும். கிரகங்களின் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதன்படி, சனிபகவான் கோபக்கார கிரகமாகவும், மோசமான பலன்களை தருபவராகவும் அறியப்படுகிறார்.
ஆனால் சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் பெறுவார்கள். அத்தகைய ஒரு ராஜயோகம் தான் ஜென்மாஷ்டமிக்கு முன் உருவாகப் போகிறது.
சனிபகவான் வழக்கமாக ஒரு ராசியில் இருந்து இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்வார்கள். தற்போது மீன ராசியில் இருக்கும் சனிபகவான், சூரியனுடன் இணைந்து திரிகேச யோகத்தை உருவாக்குகிறார்.
இந்த பெயர்ச்சியால் 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபத்தை கொண்டு வரப்போகிறது.
அந்த வகையில், எதிர்வரும் ஆகஸ்ட் 12 தேதி நடக்கப்போகும் இந்த யோகத்தில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சனிபெயர்ச்சியால் வரும் அதிர்ஷ்டம்
விருச்சிகம் | விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் திரிகேச யோகத்தால் நன்மை பெறுவார்கள். இந்த காலப்பகுதியில் சனிபகவான் விருச்சிக ராசியின் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். தற்போது அவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு வெற்றியாக மாறும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளின் சாதனை பற்றிய பெருமிதம் இருக்கும். திரிகேச யோகம் உறவுகளை வலுப்படுத்தும் என்பதால் உங்கள் வீடுகளில் சண்டையிட்டுக் கொண்டு பேசாமல் இருப்பவர்கள் இணைவார்கள். இலக்குகள் மற்றும் தனிப்பட்ட தொழில்கள் வளர்ச்சியடையும். |
கும்பம் | கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் உருவாக்கிய ராஜயோகம் வாழ்க்கையின் உச்சத்தைக் காட்டும். இந்த காலப்பகுதியில் மற்றவர்கள் மீதுள்ள அன்பும், மரியாதையும் அதிகரிக்கும். எனவே, இந்த ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பிய பல விஷயங்களை மிக விரைவாக நிறைவேற்றிக் கொள்வார்கள். புதிய வழிகளில் பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் வரும். அவர்களின் வாழ்க்கையில் உள்ள பல சிக்கல்கள் இப்போது முடிவுக்கு வரும். கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவார்கள். சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். சனிபகவான் அவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி, முன்னேற்றம் காண்பார்கள். |
கடகம் | கடக ராசியில் பிறந்தவர்கள் திரிகேச யோகத்தால் மிகப்பெரிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அடைவார்கள். இந்த காலப்பகுதியில் வரும் வருமானம் அவர்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்லும். பல வழிகளிலிருந்து வருமானம் கிடைக்கும். பல ஆதாரங்களில் இருந்து வரும் பணம் நிதிநிலையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சிலர் புதிய நபர்களை சந்தித்து அவர்கள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்துவார்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம். புதிய தொழில் ஆரம்பிக்கும் பொழுது இதுவே சிறந்த நேரம். உங்கள் குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைக் கேட்கலாம். இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை முதலீடு செய்பவர்கள் பெரிய அதிர்ஷ்டம் உள்ளது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
