30 ஆண்டுக்கு பின்பு நிகழும் சனிபகவானின் பெயர்ச்சி! எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்?
சனி பகவான் 30 ஆண்டுக்கு பின்பு மேஷ ராசியில் நுழையும் நிலையில் இத்தருணத்தில் அதிர்ஷ்டத்தை சந்திக்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சனி பகவான்
ஜோதிடத்தில் சனி பகவான் நீதியின் கடவுளாக திகழும் நிலையில், 2027ம் ஆண்டில் சனி பகவானின் பெயர்ச்சியானது மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
அதாவது 30 ஆண்டுகளுக்கு பின்பு இந்த பெயர்ச்சி நடைபெறுகின்றது. அதாவது மேஷ ராசியில் இந்த மிகப்பெரிய பெயர்ச்சி நடைபெறுவதால் சிலருக்கு பொன்னான தருணமாக இவை அமைகின்றது.
மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான் ஒரு ராசியில் பயணித்து முடிப்பதற்கு இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றார்.
இந்நிலையில் மேஷ ராசியில் சனி பெயர்ச்சி என்பது சனியின் பலவீனமான ராசியாக பார்க்கப்படுகின்றது. இதனால் பலரது வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழுமாம்.
வரும் 2027 ஆம் ஆண்டில் நிகழப் போகும் சனி பெயர்ச்சி மூன்று ராசியினருக்கு அதிர்ஷ்டமாக மாறுமாம்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு நீண்டகாலம் இருந்து வந்த ஏழரை சனி முடிவிற்கு வருவதுடன், மன அழுத்தம், அதிக செலவுகள், வேலையில் ஏற்படும் தாமதத்திலிருந்து விடுபடுவதுடன், புதிய வேலை வாய்ப்பு, பெரிய பொறுப்புகளும் உங்களுக்கு காத்திருக்கின்றது.

சிம்மம் மற்றும் தனுசு
அதே போன்று சிம்மம் மற்றும் தனுசு ராசியினருக்கு சனியின் பாதிப்பு முடிவிற்கு வருகின்றது. நீங்கள் அனுபவித்து வந்த குடும்ப மோதல் மற்றும் வேலை தடைகள் இவை நீங்குவதுடன், தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வேகமாக நடைபெறும்.
ரிஷபம்
ஏழரை சனியின் முதல்கட்டம் ரிஷப ராசியில் தொடங்கும் நிலையில், லாப சனியால் குறித்த ராசிக்கு தொழிலில் முன்னேற்றம், நிதி மற்றும் முதலீடுகளில் லாபம் ஏற்படுகின்றது. புதிய வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைக்குமாம்.

கன்னி மற்றும் மகரம்
கன்னி மற்றும் மகர ராசியினர் சனி திசை பலன்களை அனுபவிக்க தொடங்குவதால், நிதி பரிவர்த்தனையில் எச்சரியாக இருக்க வேண்டும். மேலும் எந்த முக்கியமான முடிவுகளையும் அவசரப்பட்ட எடுப்பதைத் தவிர்க்க வேண்டுமாம்.
தன யோகங்கள் யாருக்கு?
கும்பம், சிம்மம், தனுசு ராசியினருக்கு 2027ம் ஆண்டு நிதி ரீதியாக வலுவாக இருப்பதுடன், தொழிலில் புதிய ஒப்பந்தம் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை பெறவும் செய்வீர்கள். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |