49 வயதாகும் நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சசிகுமார்
தமிழ் சினிமாவில் பல வருட போராட்டத்திற்கு மத்தியில் சாதித்த நடிகர்களின் ஒருவர் தான் நடிகர் சசிகுமார்.
இவர் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சசிகுமாருக்கு ஒரு சிறந்த பெயர் கிடைத்தது.
மேலும் சசிகுமார் நடிப்பில் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், தாரை தப்பட்ட, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத்தேவா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் சமிபக்காலமாக நடிகர்களின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில், இன்றைய தினம் சசிகுமார் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்களை வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் சசிகுமாருக்கு, மதுரையில் உள்ள வீட்டுடன் சேர்த்து சசிகுமாருக்கு சுமார் 35 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் ஒரு படத்துக்கு சுமார் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாகவும், ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |