நடிகை சரோஜா தேவி வீட்டில் அரங்கேறிய பூஜை... புகைப்படத்தை வெளியிட்ட மனோபாலா; குவியும் லைக்ஸ்!
நடிகை சரோஜா தேவி வீட்டில் நடைபெற்ற வரலக்ஷ்மி விரதம் பூஜையின் புகைப்படத்தை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.
83 வயதாகும் நடிகை சரோஜா தேவின் இன்னமும் அதே மிடுக்குடன் தோற்றமளிக்கும் இந்த புகைப்படம் ஒட்டுமொத்த சரோஜா தேவி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
17வது வயதில் கன்னடத்தில் வெளியான மகாகவி காளிதாஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சரோஜா தேவி. 1956ம் ஆண்டு திருமணம் எனும் தமிழ் படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். நடிகை சரோஜா தேவியை கன்னடத்து பைங்கிளி என ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.
அப்போது உள்ள முன்னணி நடிகர்களான ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனை தொடர்ந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பிலும் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. கடைசியாக தமிழில் நடிகர் சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் சரோஜா தேவி.
அதன் பிறகு பத்து ஆண்டுகள் இடைவெளி விட்டு 2019ல் வெளியான புனித் ராஜ்குமாரின் கன்னட படமான நாதசர்வபொம்மா படத்தில் சரோஜா தேவியாக வந்து கலக்கினார். மேலும், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு போட்டியாளராக கலந்து கொண்ட சரோஜா தேவி அதன் பிறகு தற்போது தான் லைம் லைட்டுக்கு வந்துள்ளார்.
83 வயதாகும் நடிகை சரோஜா தேவி இன்னமும் அதே மிடுக்குடன் இருந்து வருகிறார். இந்நிலையில், நாடு முழுவதும் வரலக்ஷ்மி விரதம் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை சரோஜா தேவி வீட்டில் நடத்தப்பட்ட பூஜை புகைப்படத்தை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
Sarojadevi house pooja pic.twitter.com/Mjumciwocb
— Manobala (@manobalam) August 20, 2021