கனடாவில் சரிகமப நடுவரை ஓட விட்ட தமிழர்கள்.. தெருவிழாவில் நடந்த குழப்பம்
கனடாவில் பாடகர் ஸ்ரீநிவாஸினை முட்டையால் தாக்கிய சம்பவம் காணொளியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கனடாவில் கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை ஏற்பாடு செய்யும்.
இந்த நிகழ்வு கடந்த 10 வருடங்களாக வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
அதே போல் இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸன் கனடாவுக்கு சென்றிருந்தார்.
அந்த சமயத்தில் இசை நிகழ்ச்சியை கனடா மக்கள் ஆரவாரமாக கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீநிவாஸனை முட்டையால் அடித்த காணொளி
இந்த நிலையில், இந்த வருடம் கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் இந்த விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் அமைப்புகள் மற்றும் கனடா வாழ் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்ககூடாது என வர்த்தகர்களிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தன. இதனால் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய பிரதான அனுசரணையாளர்கள் நிகழ்ச்சிக்கு முதல் நாள் அனுசரணையை விலக்கிக் கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து தமிழர் தெருவிழா நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் தென்னிந்திய பாடகரான ஸ்ரீநிவாஸினை முட்டையால் தாக்கியுள்ளனர்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. காணொளியை பார்த்த ஸ்ரீநிவாஸின் ரசிகர்கள் பாரிய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |