சரிகமப - வில் அடுத்த இறுதிச்சுற்று போட்டியாளர்: தேவயானி மகளா,பவித்ராவா?
சரிகமப வில் நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் இந்த வாரம் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்.
சரிகமப
தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் யார் அடுத்த இறுதிச் சுற்று போட்டியாளராக வருவார் என மக்கள் பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது வரை மூன்று போட்டியாளர்களான சுஷாந்திக்கா ஸ்ரீஹரி சபேஷன் தெரிவாகி உள்ளனர். இதில் போட்டியாளர் சபேஷன் இலங்கையை சேர்ந்தவர்.
இவர் கடந்த வாரம் போல்க் சுற்றில் எசிரே போகுது உசிரே போகுது பாடலை பாடி இறுதிச்சுற்றுக்கு தெரிவாகி இருந்தார். இந்த நிலையில் இன்னும் சில போட்டியாளர்கள் இந்த வாரம் தங்களின் திறமை காட்ட காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இனியா மற்றும் பவித்ரா இருவரும் மிக நன்றாக பாடும் போட்டியாளர்கள். இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் இந்த வாரம் இறுதி போட்டிக்கு தெரிவாகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |