சரிகமப -வில் மீண்டும் இணைந்த லிட்டில் சாம்ஸ்... மெய்சிலிர்க்க பாடிய போட்டியாளர்கள்
சரிகமப வில் இந்த வாரம் சரிகமப சங்கமம் நடைபெற உள்ளது. இதில் பழைய சரிகமப போட்டியாளர்களும் இணைந்து சிறப்பான திறமைகளை காட்டியுள்ளனர்.
சரிகமப
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இசைப் போட்டி நிகழ்ச்சி சரிகமப, தற்போது தனது ஐந்தாவது சீசனுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மொத்தம் 26 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், போட்டி விதிமுறைகளின் அடிப்படையில் சிலர் வெளியேறி, தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே தொடரில் தங்கள் இசைதிறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வாரம் முதல் நிகழ்ச்சி "சரிகமப சங்கமம்" எனும் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. இதில், கடந்த சீசன்களில் கலக்கிய முன்னாள் போட்டியாளர்கள், இந்த சீசன் போட்டியாளர்களுடன் சேர்ந்து மேடையை இசையால் அலங்கரிக்கின்றனர்.
இதில் தற்போது வெளியாகிய காணொளியில் போட்டியாளர் வர்ஷா மற்றும் புவனெஷ் மஹதி போன்றோர் அசல் பாடல் பாடி அசத்தியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
