சரிகமப : வாய்ப்பை இழந்த தேவயானி மகள் இனியா! கண்ணீர் மல்க பேசிய காணொளி வைரல்
இது சோகத்தில் வரும் கண்ணீர் அல்ல.. மகிழ்ச்சியில் தான் என சரிகமப வில் இனியா பேசிய காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப சீனியர் சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல இசை நிகழ்ச்சியான 'சரிகமப சீனியர் சீசன் 5 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த சீனனில் ஆரம்பம் முதலே ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆதரவையும் பெற்ற போட்டியாளர்களின் பட்டியலில் இனியாவுக்கும் முக்கிய இடம் காணப்பட்டது.
ஆனால், பலரின் எதிர்பார்ப்புக்கு அப்பால், இனியா இறுதிப் போட்டியாளர்கள் வரிசையில் தேர்வாகவில்லை.

இந்நிலையில், இறுதி எப்பிசோடில் இனியா மேடையில் பேசிய விடங்களும், தேவயானி தன் மகளை ஆதரித்த விதமும் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
அதுமட்டுமன்றி தன் மகளின் திறமையாலும் அவரின் சொந்த முயற்சியாலும் வெற்றி பெற வேண்டும் என்ற தேவயானியின் நோக்கத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இறுதி சுற்றுக்கு சுஹாந்திகா, ஸ்ரீஹரி, சபேசன், செந்தமிழன், ஷிவானி மற்றும் பவித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |