சரிகமப - வில் சிம்மாசனத்திற்கு கடுமையான விரதமிருக்கும் ஈழத்தமிழன்: கண்கலங்கிய தருணம்
கடந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சபேசன் மேடையில் பேசிய விடயங்கள் அனைவரையும் கண்கலங்க செய்தது.
சரிகமப
கடந்த வாரம் சரிகமப வில் OLD is GoLD சுற்று நடைபெற்றது. இதில் பல போட்டியாளர்கள் பழைய பாடல்களை பாடி சிறப்பான தருணத்தை உருவாக்கினார்கள்.
இறுதிச்சுற்க்கு தற்போது ஒரு போட்டியாளர் சுஷாந்திக்கா தெரிவாகியுள்ளார். இன்னும் 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் இருந்து நான்கு பேர் இறுதிச்சுற்றிற்கு தெரிவு செய்யப்டுவார்கள்.
அது யாராகவும் இருக்கலாம். இந்த நிலையில் கடந்த வாரம் போட்டியாளர் சபேசன் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்றிருந்தார்.
சபேஷனின் கண்கலங்க வைத்த பேச்சு
கடந்த OLD is GoLD சுற்றில் போட்டியாளர் சபேஷன் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் அவரின் குரலில் மிகவும் அருமையாக இருந்தது.
இந்த பாடலுக்கு நடுவர்கள் பாராட்டி கோல்டன் பெர்போமன்ஸ் உம் கொடுத்தனர். நடுவர் ஸ்வேதா உங்கள் பாடல் என்னை மெய் மறக்க செய்தது என கூறினார்.
இதில் தொகுப்பாளினி அர்ச்சனா... 'இப்போது நீங்கள் கோல்டன் வாங்கி உள்ளீர்கள் இப்போது அந்த ஐந்து இறுதிச்சுற்று இருக்கையில் நீங்கள் தெரிவாக தகுதி பெற்றுள்ளீர்கள் இப்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது' என கேட்டார்.
அதற்கு சபேஷன் 'நான் ஒரு விரதமிருக்கிறேன் அந்த இறுதிச்சுற்று சிம்மாசனத்தில் அமராமல் நான் என் வீட்டில் இருக்கும் யாருடனும் பேச மாட்டேன் என கூறினார்'.
இது அரங்கத்தில் இருந்தவர்களை கண்கலங்க செய்தது. அப்போது அர்ச்சனா 'நீங்கள் தெரிவாவீர்கள் அம்மாவிடம் அந்த இருக்கையில் இருந்து பேசுவீர்கள் என்று கூறினார்'.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |