சரிகமப: ஒரு தசாப்தத்தின் பின் ஈழத்து இளைஞனுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு
சரிகமப தேவா சுற்றில் போட்டியாளர் சபேசன் பாடிய பாடலுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி பிரபல டிவியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் போட்டியாளர்கள் சீசன் 5 இல் போட்டி போட்டு பாடிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் One On One சுற்று நடைபெற்று முடிந்தது. இதில் போட்டியாளர் தரங்கிணி போட்டியை விட்டு வெளியேற்றபட்டார்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தேவா பாடலை பாட காத்திருக்கின்றனர்.
இதில் போட்டியாளர் சபேசன் தேவாவிடம் 'சார் நீங்கள் இலங்கை வந்திருந்த சமயத்தில் நான் உங்கள் கன்செப்டில் கோரஸ் ஆக பாட இருந்தேன் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்போது 10 வருடங்கள் கழித்து உங்கள் முன்னிலையில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது' என கூறினார். இதை அடுத்து 'கொஞ்ச நாள் பொறு தலைவா' பாடலை பாடினார்.
இதற்காக கோல்டன் பெர்போமன்ஸ் உம் கிடைக்கிறது. இதன் பின்னர் தேவா டிசம்பர் ஐந்து என்னுடைய கன்செப்ட் இலங்கையில் உள்ளது. அதில் நீயும் பாட வேண்டும் என்ற வாய்ப்பை கொடுக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |