சரிகமப - போட்டியாளர் பவித்ரா பாடலுக்கு ஸ்வேதா மோகனின் பாராட்டு... தேவாவின் பரிசு
சரிகமப போட்டியாளர் பவித்ரா 'கறுப்புத்தான் எனக்கு பிடித்த கலறு' பாடலை பாடி தன் மகளுக்கு தேவாவிடம் விலைமிக்க முடியாத பரிசை பெற்று கொடுத்தார்.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சி தற்போது 16 வாரங்களை கடந்து மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு வருகின்றது. கடந்த வாரம் ஒருவருக்கொருவர் சுற்று நடைபெற்றது இதில் போட்டியாளர் தரங்கிணி வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் இசையமைப்பாளர் தேவாவின் சுற்று நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் தேவாவின் பாடல்களை பாடி அவர்களுக்கான பாராட்டுக்களை பெற்றுக்கொள்வார்கள்.
இந்த நிலையில் தான் கணவனை இழந்து தன் கணவனின் கனவு நினைவாக சரிகமப மேடை ஏறிய போட்டியாளர் பவித்ரா தேவா சுற்றில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் பாடல் பாடி இருந்தார்.
இதற்கு நடுவர்கள் பவித்ராவிற்கு நல்ல பாராட்டு தெரிவித்தார்கள். இந்த நிலையில் பவித்ராவிற்கு இருக்கும் மகள் நட்சத்திராவிற்கு ஒரு பரிசுப்பொருளை கொடுக்கிறார்.
அது ஒரு கீபோட் அதாவது இனிமேல் நீ என்னிடம் தான் இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் தேவா கூறுகின்றார். இதற்கு போட்டியாளர் பவித்ரா அதாவது பிள்ளையின் தாய் பெருமைப்பட்டு நன்றி கூறும் காட்சிகள் அனைவரையும் ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
