நடுவர்களின் மனதை வென்ற இலங்கை தமிழன்.. கார்த்திக் கொடுத்த அட்வைஸ்
S.P பாலசுப்பிரமணியம் பாடலை பாடிய இலங்கை தமிழனுக்கு சரிகமப மேடையில் கிடைத்த அங்கீகாரம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
சரிகமப 5 நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய நான்கு சீசன்களை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, தற்போது ஐந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.
சரிகமப நிகழ்ச்சி பல விமர்சனங்களை பெற்றாலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் தன்னுடைய சொந்த குரலை வைத்து சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது.
அத்துடன் நிறுத்தாமல் மிகவும் கஷ்டமான பின்னணியில் இருந்து வரும் போட்டியாளர்களுக்கு நடுவர்கள் மற்றும் அங்கு பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் பலர் உதவிச் செய்து வருகிறார்கள். இதுவும் இந்த நிகழ்ச்சியை காண மக்கள் வருவதற்கு முக்கிய காரணம்.
சபேசனுக்கு கிடைத்த அங்கீகாரம்
இந்த நிலையில், கடந்த வாரம் SPB சுற்று நடந்து முடிந்தது. நாம் நினைத்ததை விட போட்டியாளர்கள் சிறப்பாக பாடியிருந்தார்கள். அதில் சிலருக்கு Golden Performances கொடுக்கப்பட்டது.
இலங்கையில் இருந்து சென்று சரிகமபவில் முக்கிய போட்டியாளராக இருக்கும் சபேசன் பாடிய பாடல் நடுவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
மேலும், 9.5 புள்ளிகள் கொடுத்த நடுவர்கள் சபேசனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
