சரிகமப- வில் இறந்த நண்பணுக்காக பாடிய போட்டியாளர்: கண்ணீரில் ஆழ்த்திய தருணம்
சரிகமப வில் உயிருடன் இல்லாத தன் நண்பனுக்காக பாடி அரங்கத்தில் இருந்த அனைவரையும் அழ வைத்த போட்டியாளர்.
சரிகமப
பல்வேறு திறமைகள் கொண்ட போட்டியாளர்கள் கலக்கி வருகிற சரிகமப நிகழ்ச்சி, தொடர்ச்சியாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் விதிமுறைகளின்படி சில போட்டியாளர்கள் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஒரு புதிய கட்டமாகும் “டெடிகேஷன் சுற்று” தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றில், போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்ற நபர்களுக்காக, உணர்வுப்பூர்வமாக பாடல்களை பாடுவார்கள். அந்த வகையில் உயிருடன் இருப்பவர்களுக்கு பாடுவது சாதாரணம்.
ஆனால் இற்ந்துபோன தன் நண்பனை நினைத்து அவனுக்காக ஒரு பாடலை பாடி சமர்ப்பிப்பது சாதாரணமல்ல. இதனை போட்டியாளர் அறிவழகனள் நிரூபித்து காட்டியுள்ளார்.
அவர் இறந்த தன் நண்பனுக்காக பாடல் பாடி முடிந்ததும் நண்பனின் தந்தை அரங்கிற்கு வருகை தருவதை பார்த்த அறிவழகன் கதறி அழுத காட்சி அரங்கில் இருந்த அனைவரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |