சரிகமப - வில் தேவயானி மகள் பாடியதற்கு நடுவர் ஸ்ரீனிவாஸ் கூறியது... பெருமை கண்ணீரில் இனியா
பஞ்சபூத சுற்றில் இனியா பாடிய பாடலுக்கு என்றும் கூறாத பெருமை பாராட்டை நடுவர்கள் கூறியவுடன் இனியா அப்படியே பெருமை கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
சரிகமப
சரிகமப வில் இன்று பஞ்சபூத சுற்று வெகு விமர்சையாக நடைபெற்றுகொண்டு வருகிறது.
இதில் போட்டியாளர்கள் எதிர்பாராத திறமைகளை காட்டி போட்டியாளர்கள் அனைவரையும் வியக்க வைக்கின்றனர். இந்த சுற்று நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் போன்றவற்றை பிரதிபலிக்கும்படி பாடல் பாடப்படுகின்றது.
இந்த நிலையில் தேவயானி மகள் இனியா மேகம் கறுக்குது பாடல் பாடி இருந்தார்.
சினிமா குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் அவர்களை சினிமாவில் குடும்பம் என்ற Support இல் தான் உள்ளே வந்திருப்பார்கள் என நினைப்பது சாதாரணம்.
தேவயானி எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் அவர் மகளை அவளுடைய மயற்சியிலேயே முன்னேறி செல்ல வழி வகுக்க வேண்டும் என்பது தான் தேவயானியின் ஆசை.
இந்த நிலையில் சரிகமப வில் பல சுற்றுக்கள் கடந்து கடந்த வாரம் பஞ்சபூத சுற்று நடைபெற்றது. இதில் இனியா பாடிய மேகம் கறுக்குது பாடலுக்கு நடுவர்கள் இனியாவை பாராட்டினார்கள்.
நடுவர் ஸ்ரீனிவாஸ் கூறியது “இனியா இன்று நீ பாடிய பாடல் உன்னுடைய உழைப்பை காட்டுகிறது. உன் முன்னேற்றத்தை காட்டுகிறது என கூறினார்”.
இதன்போது தொகுப்பாளினி அர்ச்சனா இனிமேல் நீ தேவயானி ராஜ்குமார் பிள்ளை இல்லை ராஜ்குமார் தேவயானி தான் இனியாவுடைய பெற்றோர் என்ற பெயரை இந்த மேடையில் நடவர்கள் வாயால் கூறியது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என கேட்டார்.
இதில் இனியா பெருமையாக அழுதுகொண்டே என் அம்மா எனக்கு நிறைய சப்போர்டாக இருந்து இருக்கிறர். ஆனால் நான் இந்த மேடையில் என்னுடைய சுய முயற்ச்சியால் தான் வந்தேன்.
இன்று இப்படி நடுவர்கள் கூறியதற்கு பெருமைபடுகிறேன் என கண்கலங்கி கொண்டே கூறினார். ஸ்ரீனிவாஸ் இரண்டாம் சரணத்தையும் பாடும்படி இனியாவை கேட்டார். இனியாவின் வளர்ச்சி அந்த பாடல் வரிகளில் தெரிந்தது.
எல்லா விமர்சனங்களையும் தாண்டி இனியா மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த போது மன்னேறி வர வேண்டும் என்ற எண்ணம் பஞ்ச பூத சுற்றில் இனியாவிற்கு கோல்டன் பெர்போமன்ஸ் வாங்கி கொடுத்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |